காங்க்டாக் நகரில் அமைந்துள்ள டோ ட்ருல் சோர்ட்டென் எனப்படும் இந்த பௌத்த ஸ்தூபியானது திபெத்திய ந்யிங்மா பௌத்த மதப்பிரிவின் தலைமைக்குருவான ட்ருல்ஷிக் ரின்போச்சே என்பவரால் அமைக்கப்பட்டிருக்கிறது. 1945ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ஸ்தூபியின் உள்ளே டோர்ஜே பூர்பா மற்றும் காங்யூர் நினைவுப்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த ஸ்தூபியை சுற்றி குரு ரிம்போச்சே’வின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள சோர்ட்டென் லக்காங் மற்றும் குரு லக்காங் எனப்படும் இரண்டு அமைப்புகளும் காணப்படுகின்றன.
டோ ட்ருல் சோர்ட்டென் வளாகத்தை சுற்றி ‘ஓம் மனே பத்மே ஹம்’ எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 108 பிரார்த்தனை சக்கரங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications