ஃபாம்பாங் லோ காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம் காங்க்டோக் நகரத்திற்கு 25 கி.மீ முன்னதாகவே அமைந்திருக்கிறது. இது பல்வேறு உயிரினங்கள் மற்றும் தாவரங்களை கொண்டுள்ளது.
பல அரிய வகை விலங்குகளோடு, ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள், வித்தியாசமான ரோடோடென்ரோன் மரங்கள் போன்றவற்றை இங்கு காணலாம். தடிமனான மூங்கில் வகைகள், ஃபெர்ன், கட்சு, சம்பா மற்றும் ஓக் மரங்கள் இந்த வனப்பகுதியில் அடர்ந்து காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications