காங்க்டாக் பகுதியில் அமைந்துள்ள இந்த தகுர்பாரி கோயில் ஒரு முக்கிய யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. சிக்கிம் பகுதியிலுள்ள பழமையான ஹ்ந்துக் கோயில்களில் ஒன்றான இது காங்க்டாக் நகரின் மையப்பகுதிலேயே அமைந்துள்ளது.
இதில் எல்ல முக்கிய தெய்வங்களின் சிலைகளையும் தரிசிக்கலாம். சிக்கிங் பகுதியின் சொக்யால் மன்னரால் தானமாக அளிக்கப்பட்ட நிலத்தில் 1935ம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
1945-47ம் ஆண்டுகளில் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு மிகப்பெரிய கோயில் வளாகமாக மாற்றப்பட்டது. இந்த கோயில் வளாகத்திலேயே ஒரு பொதுக்கூடம் மற்றும் நூலகம் போன்றவற்றை உருவாக்கும் வேலைகளும் கடந்த வருடம் துவங்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications