ஊராட்சியான தஸ்னா உத்தரபிரதேசத்தின் கசியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹாபூரின் கிழக்கு பக்கமாக 24கிமீ தொலைவிலும், மாவட்ட தலைநகரின் இருந்து 10கிமீ தொலைவிலும் இவ்வூர் உள்ளது.
உள்ளூர் கதைகளின்படி மஹமூத் கஜ்னவி என்பவரின் ஆட்சியின் போது குஷ்டநோயால் பாதிக்கப்பட்டிருந்த சலர்சி என்ற ராஜபுத்திர தலைவர் ஹர்த்வாரில் உள்ள கங்கையில் தன் நோய் தீர வேண்டி குளிக்க முடிவு செய்தாராம்.
அப்போது வழியில் வந்த தஸ்னாவின் அழகால் கவரப்பட்ட அவர் அங்கேயே ஒரு கோட்டையை அமைத்து தங்க முடிவு செய்தாராம். கோட்டைக்கான அஸ்திவாரம் தோண்டப்படும்போது ஒரு ஊழியரை பாம்பு கடித்து அவர் இறந்தார்.
இந்த சம்பவத்தின் காரணமாக இவ்வூர் தஸ்னா, அதாவது பாம்பின் கடி என்ற பெயர் பெற்றது. பின்னர் இவ்வூர் அஹ்மத் ஷாஹ் அப்தலி என்வரால் சூறையாடப்பட்டு, கோட்டை அழிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications