மோடிநகர் ஊராட்சியைச் சேர்ந்த முரத் நகர் கஜியாபாத்தில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ளது. ஆலம்கீர்IIவின் மகனான முகலாய நவாப் மிர்ஸா முகமது முரத் என்பரால் 400வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது இவ்வூர். அவரின் நினைவகமும் இவ்வூரின் அருகிலேயே அமைந்துள்ளது.
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் சொந்த ஊர் முரத்நகராகும். ஹரித்வாரில் இருந்து வந்து இவ்வூரைக் கடக்கும் கங்க் நஹர் என்ற கால்வாய் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா தளமாக விளங்குகிறது.
பருத்தி துணிகளுக்கும், குறிப்பாக படுக்கை விரிப்புகள், கைத்தறிகள், ஜரிகை வேலைப்பாடுகளுக்கு புகழ்பெற்ற விளங்குகிறது. இந்திய ராணுவ அமைச்சகத்தால் கட்டப்பட்ட தொழிற்சாலையும் இங்கு உள்ளது. தேசியத் தலைநகரான டெல்லியின் ஒருபகுதியாக இவ்வூர் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications