உத்தரகன்னட மாவட்டத்திலேயே வெகு பிரசித்தமான கோயில் இந்த மஹாபலேஷ்வரர் கோயில் ஆகும். பிரணாலிங்கம் அல்லது ஆத்மலிங்கம் என அழைக்கப்படும் கீர்த்தி பெற்ற சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது.
காசியில் உள்ள சிவன் கோயிலுக்கு நிகரான பெருமையை பெற்றுள்ள இந்த மஹாபலேஷ்வரர் கோயில் ஏழு முக்திக்ஷேத்திரங்களில் ஒன்றாகும். கோயிலுக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் எதிரிலுள்ள அரபிக்கடலில் மூழ்கி எழுகின்றனர். வெண் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.பக்தர்கள் இங்கு சதுரவடிவ சாளிகிராம பீடத்தினுள்ளே வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை பீடத்தின் மேலுள்ள துவாரத்தின் வழியாகக் காணலாம். இந்த சிவலிங்கத்தை தரிசித்தவர்களுக்கு விசேஷ அருள் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
மேலும், 1500 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு சிவன் சிலையும் இந்த கோயிலில் உள்ளது. ஹிந்துக்கள் தங்கள் இறந்த உறவினர்களுக்கான கிரியைகளை நிறைவேற்ற இங்கு வருகை தருகின்றனர். சிவராத்திரியின் போது பக்தர்கள் இந்த ஸ்தலத்தில் பெருமளவு எண்ணிக்கையில் கூடுகின்றனர்.



Click it and Unblock the Notifications