Search
  • Follow NativePlanet
Share

கோரக்பூர் - பகவத் கீதையை உலகுக்கு அளித்த நகரம்!

14

உத்தரபிரதேச தலைநகரான லக்னோவில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  கோரக்பூர் முற்காலத்தில்,  மவுரிய, ஸ்ஹுங்கா, குஷான், மற்றும் குப்தா பேரரசுகளின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. இந்நகரம் கோகர்நாத் என்கிற துறவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. கிழக்கு உத்திர பிரதேசத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்கும் கோரக்பூர், வட கிழக்கு ரயில்வேயின் தலைமையகமாக விளங்குகிறது. மேலும் இந்நகரம் கெளஸிநகர், கபிலவஸ்து, மற்றும் நேபாளத்தின் பிரதான நுழைவாயிலாக உள்ளது. 

கோரக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

கோரக்பூரில் மிகப் புனிதமான பகவத்கீதையை வெளியிடும்  முக்கியமான மற்றும் புகழ் வாய்ந்த கோரக்பூர் பிரஸ் உள்ளது. இந்நகரம், இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களில் போன்று பல கோவில்களால் நிறைந்துள்ளது.

அவற்றுள் ஆரோக்கிய மந்திர் மிகவும் புகழ் பெற்றது. இங்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான இயற்கை சார்ந்த சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன. கோரக்பூர் கோயில் இந்த பகுதியில் உள்ள மிக முக்கியமான மற்றும் அற்புதமான கோவில்களில் ஒன்றாகும்.

இயற்கை அழகை பொருத்த வரை இங்கு 700 ஹெக்டேர் பரப்பளவுள்ள கோரக்பூர் ராம்கர் டால் அல்லது ஏரி, மற்றும்  கெளஸ்மி காடுகள் ஆகியன உள்ளன. இந்த காடுகளில் சால் மற்றும் செகோயா மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

மேலும் கோரக்பூரில் வீர் பகதூர் சிங் கோளரங்கம், மற்றும், இமாம்பரா எனகிற தர்காவும் உள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டை சுபி துறவிக்காக கட்டப்பட்டது.

கோரக்பூர் பார்க்க சிறந்த நேரம்

கோரக்பூர் நகரை சுற்றிப் பார்க்க நவம்பர் முதல் மார்ச் வரையிலான ஐந்து மாதங்களே மிகச் சிறந்தவையாக கருதப்படுகின்றன.

கோரக்பூரை எவ்வாறு அடைவது?

கோரக்பூரை  விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் எளிதாக அடையலாம்.

கோரக்பூர் சிறப்பு

கோரக்பூர் வானிலை

சிறந்த காலநிலை கோரக்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கோரக்பூர்

  • சாலை வழியாக
    உத்தர பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பொது மற்றும் தனியார் சாலை போக்குவரத்து பேருந்துகள் கோரக்பூருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்த நகரத்தில் மிக முக்கியமான கோரக்பூர் சந்திப்பு உள்ளது. இது வட கிழக்கு ரயில்வேயின் தலைமையகமாக செயல்படுகிறது. கோரக்பூர் மும்பை, தில்லி, லக்னோ, அலகாபாத், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கோரக்பூரின் விமான நிலையம், நகரத்தின் மையத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அங்கிருந்து நகருக்குள் வருவதற்கு வாடகை டாக்ஸிகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu