Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருவாயூர் » ஈர்க்கும் இடங்கள் » யானை முகாம்

யானை முகாம், குருவாயூர்

7

குருவாயூரப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் புன்னத்தூர் கொட்டா எனுமிடத்தில் இந்த யானை முகாம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை முகாம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடம் புன்னத்தூர் அரச வம்சத்துக்கு சொந்தமானதாகும். 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த காப்பகத்தில் சுமார் 60 யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இங்குள்ள யானைகள் பக்தர்களால் குருவாயூரப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டவை என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும். குருவாயூர் பத்மநாபன் மற்றும்ம் குருவாயூர் கேசவன் போன்ற பிரசித்தி பெற்ற கோயில் யானைகள் இந்த காப்பகத்தில் வளர்க்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த யானைகள் ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன. திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களின் போது இந்த யானைகளின் மீது கோயில் விக்கிரகங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

மேலும் இந்த யானைக்காப்பகத்தில் இருக்கும் யானைகள் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் யானைப்பந்தயங்களிலும் பங்கேற்கின்றன. ஆனயோட்டம் என்று அழைக்கப்படும் இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் யானைக்கு குருவாயூரப்பன் சிலையை எடுத்துச்செல்லும் பெருமையான அந்தஸ்து அளிக்கப்படுகிறது. பார்த்து ரசிக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி பல பயணிகளை குருவாயூர் நோக்கி ஈர்க்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed