Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருவாயூர் » ஈர்க்கும் இடங்கள் » குருவாயூரப்பன் கோயில்

குருவாயூரப்பன் கோயில், குருவாயூர்

30

இந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் நான்காவது கோயில் எனும் பெருமையை இந்த செல்வம் மிகுந்த குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது.

மஹாவிஷ்ணுவே பூமியில் வீற்றிருக்கும் ‘பூலோக வைகுண்டம்’ என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த ஆலயத்தை தரிசிப்பது மிகப்புண்ணியமான ஒன்றாக நம்பப்படுகிறது. முக்கியமான வைணவ திருத்தலம் எனும் ஒப்பற்ற கீர்த்தியையும் இந்த தொன்மையான ஆலயம் கொண்டுள்ளது.

இந்த ஆலயத்தின் மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தின் பாலகோபால ரூபத்தில் குடிகொண்டுள்ளார். கிருஷ்ணலீலாக்கள் எனப்படும் ஷீகிருஷ்ணரின் இளம்பருவக்கதைகள் இந்த கோயிலின் சுவர்களில் சுவரோவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணாட்டக்களி எனும் நடனக்கலை வடிவம் இந்த கோயிலில் தோன்றி வளர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பலவித கர்நாடக இசைக்கச்சேரிகளும் பாரம்பரிய கேரள நடனக்கலை வடிவங்களும் இந்த கோயிலில் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த திருக்கோயிலில் தினமும் திருமண நிகழ்ச்சிகளும் சோறுண்ணு வைபவங்களும் நடத்தப்படுகின்றன. தினமும் இரண்டு முறை பக்தர்களுக்கு இலவச உணவும் வழங்கப்படுகிறது.

ஷிவேலி திருநாளின்போது கோயில் விக்கிரகமானது கோயில் யானைகளின்மீது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் திருவிழாக்காட்சியை தரிசிக்க முடிந்தால் மிக விசேஷம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu