Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருவாயூர் » ஈர்க்கும் இடங்கள் » இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங்

இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங், குருவாயூர்

30

குருவாயூரின் பல கோயில்களை தரிசித்தபின்னர் ஆசுவாசமாக சுற்றிப்பார்க்க இந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங் எனப்படும் ஓவியக்கல்லூரிக்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.

1989ம் ஆண்டில் ஷீ மாம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயர் என்பரால் இது துவங்கப்பட்டுள்ளது. இவர் சுவரோவியக்கலையில் பிரசித்தி பெற்ற ஓவியக்கலைஞராவார். தற்சமயம் குருவாயூர் தேவஸ்வோம் நிர்வாகத்தால் நடத்தப்படும் இந்த ஓவியக்கல்லூரி குருவாயூரப்பன் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

இந்த மையத்தில் சுவரோவியம், கலை, அழகம்சம் மற்றும் சிற்பக்கலை குறித்த பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த துறைகளில் ஐந்து வருட பட்டயப்படிப்புகளை இந்த கல்லூரி வழங்கிவருகிறது. இந்திய பாரம்பரிய கல்விமுறையான குருகுல முறைப்படி இங்கு பயிற்றுவிக்கப்படுவது இதன் முக்கியமான சிறப்பம்சமாகும்.

அதாவது ஆசிரியர் அருகிலேயே வாழ்ந்து அவரது கண்காணிப்பிலேயே கலை, கல்விகளை கற்று தேறுவதே குருகுல முறை. இங்கு கேரளாவிலிருந்து மட்டுமல்லாமல் இதர மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்களும் தங்கி பயிலுகின்றனர்.

இந்த மையத்தில் கேரளிய கலாச்சாரப் பாரம்பரியம் சம்பந்தப்பட்ட பலவித தலைப்புகளில் சொற்பொழிவுகள், கண்காட்சிகள் மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் போன்றவையும் நடத்தப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Jun,Thu
Check Out
19 Jun,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri