Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » ஈர்க்கும் இடங்கள் » காமாக்யா கோயில்

காமாக்யா கோயில், குவஹாத்தி

49

குவஹாத்தி நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் காமாக்யா கோயிலை தரிசிக்காமல் திரும்பினால் இந்த சுற்றுலாப்பயணம் பூர்த்தியடையாது என்றே சொல்லலாம். ஹிந்து ஆன்மீக கலாச்சாரத்தின்படி 51 சக்திபீடங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது.

நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் வீற்றுள்ளது. 10 மஹாவித்யாக்களுக்கான தனித்தனி கோயில்கள் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.

திரிபுரசுந்தரி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய தெய்வங்களின் சிலைகள் கோயிலின் பிரதான கருவறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற ஏழு அவதாரங்களின் சிலைகள் பிரதான கோயிலை சுற்றியுள்ள சிறு கோயில்களில் பிரதிஷ்டைசெய்யப்பட்டிருக்கின்றன.

அம்புபச்சி மேளா எனும் திருவிழா இந்த காமாக்யா கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிலக்கு நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதீகமாக சொல்லப்படுகிறது.

நாடெங்கிலும் இருந்து தந்திரிக் யோகிகள் இந்த திருவிழாவின்போது அதிகம் விஜயம் செய்கின்றனர். துர்க்கா பூஜா மற்றும் மானஷா பூஜா ஆகிய திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

ஹிந்துக்கள் மட்டுமே இந்த காமாக்யா கோயிலில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவலாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue