Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » ஈர்க்கும் இடங்கள் » மனாஸ் தேசியப் பூங்கா

மனாஸ் தேசியப் பூங்கா, குவஹாத்தி

49

மனாஸ் தேசியப் பூங்கா, அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப் பிரபலமான தேசியப் பூங்காக்களுள் ஒன்றாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பூங்கா, புலிகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதி மற்றும் யானைகள் சரணாலயம் போன்ற பல்வேறு பெருமைகளைக் கொண்டதாகும்.

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இது, பூட்டான் வரை நீண்டு அங்கு ராயல் மனாஸ் தேசியப் பூங்கா என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பூங்கா, முள்ளடர்ந்த முயல், ஓடுடைய அஸ்ஸாம் ஆமைகள், குள்ளமான பன்றிகள் மற்றும் தங்க நிற கரடிக்குரங்கு போன்ற அருகிக் கொண்டே வரும் பல்வேறு வகை விலங்கினங்களின் வசிப்பிடமாகவும் உள்ளது.

இங்கு நீர்வாழ் காட்டெருமைகளும் கணிசமான அளவில் காணப்படுகின்றன. மேலும் இப்பூங்காவில் சுமார் 55 வகை பாலூட்டிகள், 380 வகை பறவைகள், 50 வகை ஊர்வன மற்றும் 3 வகை நிலநீர்வாழ் உயிரினங்கள் போன்றவற்றையும் காணலாம்.

சுமார் 360 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டு விரிந்திருக்கும் இப்பூங்காவில், யானைப் பூங்காவை சுற்றிப் பார்த்தல், வனப்பயணங்கள், இயற்கை நடைப்பயணங்கள் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட்டு சுவாரஸ்யமாக பொழுதைக் கழிக்கலாம். இ

ப்பூங்கா, கொக்ராஜ்ஹர், சிராங், பக்ஸா, உடல்குரி மற்றும் டர்ராங் போன்ற பல்வேறு மாவட்டங்களின் அதிகார வரம்புக்குள் அமைந்துள்ளது. இப்பூங்கா செல்வதற்கான உகந்த காலகட்டம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டமே ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue