Search
  • Follow NativePlanet
Share

ஹால்டியா  – காக்கும் துறைமுகம்!

4

வருடக்கணக்காக ஹால்டியா என்ற நகரத்தின் துறைமுகம் தான் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள கடல் நீரின் ஆழம் மிகவும் குறைவாக இருப்பதால் பெரிய கப்பல்கள் இங்கு வந்தால் தரை தட்டும். இதன் காரணமாக மாநில அரசாங்கம் ஹால்டியாவின் வளர்ச்சி மீது தன் பார்வையை செலுத்த வேண்டியிருந்தது.

இதன் விளைவாக ஹால்டியா நகரம் ஒரு வளமையான தொழில் நகரமாக மாறியது. மேலும் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை இந்த நகரம் ஈர்க்கிறது, இது தொழில் சார்ந்தவை மற்றும் உல்லாச பயணம் என இரண்டுமே அடங்கும். இதன் நவீனமயம் மற்றும் ஷாப்பிங் மால் பண்பாடு, வார இறுதி நாட்களில் இங்கு பொழுதை கழிக்க ஏற்ற இடமாக இதனை விளங்கச் செய்கிறது.

சொல்லப்போனால் இந்தியாவிலேயே புகழ் பெற்ற ஷாப்பிங் மாலான சிட்டி சென்டர், இந்த சிறிய நகரத்தில் குடியிருப்புப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டதாகும்.

இங்குள்ள மற்ற மக்கள் பல துறையில் வேலை செய்பவர்கள். பலதரப்பட்ட வசதி வாய்ப்புகளுடன் பல குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. காலனி வகை குடியிருப்புகள் உள்ள ஹால்டியாவில் பல ஹோட்டல்களும் உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. இவ்வகை உணவகங்களில் அருமையான பெங்காலி உணவுகள் கிடைக்கும், முக்கியமாக கடல் உணவுகள்.

அடிவானத்தை தொடும் அளவிற்கு மரங்களை கொண்ட அழகிய தோட்டங்களுடன் கூடிய கசுரீனா கடற்கரை ஒரு மிகச் சிறந்த பொழுது போக்கு தலமாகும். வார இறுதி நாட்களில் இங்கு பல உள்ளூர்வாசிகள் தங்கள் பொழுதை கழிக்க வருவார்கள்.

பரபரப்பாக இருக்கும் கொல்கத்தாவுடன் ஒப்பிடுகையில் அமைதி குடி கொண்டிருக்கும் ஹால்டியா என்பது ஓர் அருமையான சுற்றுலா தலமாகும். விளையாட்டின் மீது வங்காள மக்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை இங்கிருக்கும் டாடா கால்பந்து விளையாட்டரங்கம் நமக்கு எடுத்துரைக்கும்.

இங்கே பல இளைஞர்கள் வருவதையும் விளையாடுவதையும் காணலாம். விரைவிலேயே இங்கு ஸ்டேட் ஆப் ஆர்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் நடைபெறவுள்ளது.

இங்கு வருபவர்கள் இங்கிருக்கும் மிக பழமையான பகுதிகளான ப்ரஜனத்சக் மற்றும் ப்ரஜலல்சக்கை காண தவறவிடக் கூடாது. இது ஹால்டியாவின் நிஜமான நிறத்தை பிரதிபலிக்கும்.

ஹால்டியா மற்றும் அதனருகில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள்

ப்ரஜனத்சக், ப்ரஜலல்சக்கை, கசுரீனா கடற்கரை, கோபால்ஜ்யூ கோவில் போன்ற சுவாரசியமான சுற்றுலாத் தலங்கள் இங்கே பல உள்ளன.

ஹால்டியாவை அடைவது எப்படி?

ஹால்டியாவை விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

ஹால்டியா சிறப்பு

ஹால்டியா வானிலை

சிறந்த காலநிலை ஹால்டியா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹால்டியா

  • சாலை வழியாக
    ஹால்டியாவும் கொல்கத்தாவும் ஆசிய நெடுஞ்சாலை 45 வழியாக இணைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹால்டியாவை கார் அல்லது பைக்கில் 2 மணி நேரத்தில் வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொல்கத்தாவில் இருக்கும் ஹொவ்ராஹ் இரயில் நிலையம் தான் ஹால்டியாவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையமாகும். இங்கிருந்து நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் ய்ஜான் ஹால்டியாவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து ஹால்டியாவிற்கு 2 மணி நேரத்தில் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed