Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹலேபீடு » ஈர்க்கும் இடங்கள் » ஹொய்சளேஷ்வரா கோயில்

ஹொய்சளேஷ்வரா கோயில், ஹலேபீடு

16

ஹலேபீடுக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் இந்த ஹொய்சளேஷ்வரா கோயிலுக்கு விஜயம் செய்வது அவசியமாகும். 12ம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கோயில் டெல்லி சுல்தான்களின் படையெடுப்பால் நின்று போன நிலையில் உள்ளது. இங்கு பயணிகள் உன்னதமாக வடிக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் பீட அமைப்பின் மீது காணப்படும் நுட்பமான தொடர் சிற்ப வேலைப்பாடுகள் போன்றவற்றை ரசிக்கலாம்.நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷாந்தலேஷ்வரா கோயில் இரண்டு கோயில்களின் தொகுப்பாக காணப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையில் பல மண்டபங்களும் சிறு சன்னதிகளும் அமைந்துள்ளன.

இந்த கோயிலின் மற்றொரு விசேஷம் இங்குள்ள கருட ஸ்தம்பமாகும். இதில் இரண்டாம் பல்லலா மன்னரின் மெய்க்காப்பாளரான குருவா லக்சுமாவுக்காக உயிர்த்தியாகம் செய்யும் வீரர்களின் சிற்ப வடிப்புக்காட்சிகள் காணப்படுகின்றன.

மேலும் கோயிலின் சுவர்களில் பலவிதமான கடவுளர் மற்றும் தேவியரின்  உருவங்கள், நடன மங்கையர், பறவைகள், மிருகங்கள் போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.கோயிலின் அடிப்பாக வடிவமைப்பில் 2000 யானைகள் அதன் பாகர்களோடு ஒவ்வொன்று ஒவ்வொரு விதமான நிலைகளில் வடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர குதிரைகள் மற்றும் புராணிக மிருகங்கள் மற்றும் மலர் அலங்கார வேலைப்பாடுகளும் இங்கு நிரம்பியுள்ளன.

தெற்கு மற்றும் மேற்கு வாசல்களில் துவாரபாலகர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் அரண்மனை அமைந்திருந்த மலைப்பகுதி, நந்தி சிலை, சிவபெருமானின் தேர்  போன்றவையும் முக்கியமான இதர அம்சங்களாக இந்த கோயில் அருகில் உள்ளன.இந்த இரட்டை கோயில்கள் இடையில் ஒரு நடைபாதை வழியாக இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed