Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » ஆனேகோண்டி

ஆனேகோண்டி, ஹம்பி

84

ஆனேகுண்டி என்ற கிராமம் ஹம்பியிலிருந்து 10 கி.மீ தொலைவில் துங்கபத்திரை நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அக்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் உள்ளூர் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.

ஆனேகுண்டி எனும் பெயருக்கு கன்னடத்தில் யானைக்குழி என்பது பொருள். இந்த ஊர் ஹம்பியை விடவும் பழமை வாய்ந்த ஊர் என்பதற்கு புராண ஆதாரங்கள் உள்ளன.

ராமாயண காவியத்தின் படி சுக்ரீவன் என்ற வானர அரசனால் ஆளப்பட்ட கிஷ்கிந்தா எனும் சாம்ராஜ்யமாக இது திகழ்ந்தது என்று நம்பப்படுகிறது. இங்கு ஹனுமான் பிறந்த இடமாக நம்பப்படும் அஞ்சநாத்ரி மலை உள்ளது.

பயணிகள் இந்த ஆனேகுண்டி ஸ்தலத்தை பார்ப்பதற்கென்று முன்கூட்டி திட்டமிட்டுக் கொள்வது அவசியம். சந்தடி நிறைந்த ஹம்பி கடைத்தெருக்களை போல் அல்லாது இந்த ஆனேகுண்டி கிராமம் சலனமற்ற அமைதியான சூழலுடன் காட்சியளிக்கிறது.

கிஷ்கிந்தா டிரஸ்ட் எனும் பண்பாட்டு பாதுகாப்பு அமைப்பு இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பான உபசரிப்பு வசதிகளை அளிக்கின்றது. தற்சமயம் துங்கபத்திரை ஆற்றின் குறுக்கே ஒரு புதிய பாலமும் கட்டப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும்போது பயணிகள் ஆனேகுண்டி பகுதிக்கு செல்வதற்கான சௌகரியத்தை இன்னும் மேம்படுத்தும்.

மேலும், ஆனேகுண்டி பகுதிக்கு வரும் பயணிகள் இங்குள்ள ஷீ கவி ரங்கநாத் பஹவான் ஆலயம், கணேஷ் கோயில், சிந்தாமணி சிவபெருமான் கோயில், ஹுச்சையப்பனா மடம் மற்றும் ஒரு ஜைன கோயில் போன்றவற்றையும் பார்த்து மகிழலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri