Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » தொல்பொருள் அருங்காட்சியகம், கமலாபுரம்

தொல்பொருள் அருங்காட்சியகம், கமலாபுரம், ஹம்பி

84

கமலாபுரத்திலுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஹம்பி நகரத்தின் இரண்டு மாதிரி வடிவங்களை பார்வையிடுவதற்கென்றே பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

இந்த மாதிரி வடிவங்களை பார்ப்பதன் மூலம் பயணிகளால் ஹம்பி நகரின் வடிவமைப்பு, திசைகள் மற்றும் முக்கியமான ஸ்தலங்களின் இருப்பிடம் மற்றும் அவை குறித்த தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

அருங்காட்சியகத்தின் கடைசி காலரியில் வைக்கப் பட்டுள்ள இந்த மாதிரி வடிவம் அரண்மனைப் பகுதி பற்றிய துல்லியமான விபரங்களை அளிக்கிறது.

இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தில் நான்கு முக்கியமான பிரிவுகள் உள்ளன.

முதல் பிரிவில் மேலே குறிப்பிட்டுள்ள ஹம்பி மாதிரி வடிவங்கள் வைக்கப்பட்டுள்ளன்.

இரண்டாவது பிரிவில் ஹம்பி இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட சிலைகளும் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது பிரிவில் விஜயநகர நாகரிகத்துக்கு சொந்தமான ஆயுதங்கள், நாணயங்கள், கருவிகள் மற்றும் இன்னபிற புராதன வாழ்வியல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

நான்காவது பிரிவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த தொன்மை வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் வீரச்செயல் கல்வெட்டுகள், சதி கல்வெட்டுகள், அரண்மனையின் மாதிரி வடிவம், உடைந்த பீங்கான் ஜாடிகளின் பகுதிகள், கடவுள் பொம்மைகள் போன்றவை அடங்கும்.

இந்த தொல்பொருள் அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமைகளிலும் அரசு விடுமுறைகளிலும் மூடப்படுகிறது. மற்ற எல்லா நாட்களிலும் காலை 10மணியிலிருந்து மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது. ஹம்பி வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருங்காட்சியகத்தை பார்ப்பது மிக அவசியம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed