Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » ராஜ தராசு

ராஜ தராசு, ஹம்பி

84

துலா பாரம் என்று அழைக்கப்படும் ராஜ தராசு விஜய விட்டல சுவாமி கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. விஜயநகர அரசர்கள் இந்த இடத்தில் இருக்கும் தராசின் மூலம் தங்கள் எடைக்கு சமமான தானியங்கள், தங்கம், வெள்ளி, வைடூர்யங்கள் மற்றும் இன்ன பிற விலை மதிப்பற்ற பொருட்களை அந்தணர்களுக்கு தானமாக வழங்கினர். 

ஐதீக முக்கியத்துவம் வாய்ந்த சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது அவர்கள் இந்த எடைக்கு எடை தானத்தை வழங்கும் சம்பிரதாயத்தை கடைபிடித்தனர் என்று தெரிகிறது.இந்த தராசு அமைப்பில் 15 அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு தூண்களுக்கிடையே 12 அடிக்கு கல்லால் ஆன உத்தரம் போடப்பட்டுள்ளது. இந்த கல் உத்தரத்தின் அடிப்பகுதியில் மூன்று கொக்கி வளையங்கள் இணைக்கப் பட்டுள்ளன.

இந்த இரண்டு பளிங்கு தூண்களில் ஒரு தூணில் மட்டும் அரசர் மற்றும் இரண்டு ராணிகளின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கிருஷ்ண தேவராய மன்னரையும் அவரது இரண்டு மனைவிகளையும் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.

விஜய விட்டலா ஆலயத்தின் அருகில் உள்ள கம்ப பூபா எனும் பாதை முடிவடையும் இடத்தில் ஒரு அலங்கார வளைவு போன்று இந்த தராசு தூண்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Jun,Sun
Check Out
22 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon