Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » ஈர்க்கும் இடங்கள் » உத்தன வீரபத்ரர் ஆலயம்

உத்தன வீரபத்ரர் ஆலயம், ஹம்பி

84

இந்த உத்தன வீரபத்ரர் ஆலயத்தில் 3.6 மீட்டர் உயரமுள்ள சிவனின் அவதாரமான உத்தன வீரபத்ரர் கடவுள் சிலை காணப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள சிவபெருமானின் சிலையானது நான்கு கைகளுடன் வாள், அம்பு, வில், கேடயம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியபடி காட்சியளிக்கிறது.

பக்தர்கள் இங்கு தக்‌ஷனின் சிறிய சிலையையும் சர்வாங்க லிங்கம் என்று அழைக்கபடும் சிவ லிங்கத்தையும் காணலாம். இந்த கோயிலில் புகைப்படம் எடுப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

புராண ஐதீகத்தின் படி சிவபெருமான் இந்த மூர்க்கமான உத்தன வீரபத்ர அவதாரமெடுத்து தன் மனைவி சதியின் தகப்பனான தக்‌ஷன் என்றவனை கொன்றழித்ததாக கூறப்படுகிறது.

தக்‌ஷன்  நடத்திய யாகத்தை தடுக்க சென்ற சதியை அவள் தகப்பனான தக்ஷன் அவமதித்ததால் அவள் தற்கொலை செய்து கொள்ளவே அதற்கு பழி வாங்கும் விதத்தில் சிவ பெருமான் தக்‌ஷனை வதம் செய்ததாக அந்த கதை வழங்கி வருகிறது.

இந்த உத்தன வீரபத்ரக் கடவுள் சிவனின் அவதாரங்களில் ஒன்றான ரௌத்திர அவதாரமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. ஹம்பியின் பிரதான சாலையிலேயே அரண்மனை வளாகம் மற்றும் புனித வளாகத்துக்கு இடையில் இந்த கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் அருகே ஒரு உயரமான ஒற்றைக்கல் விளக்குத்தூணும் ஒரு சதி கல்வெட்டும் உள்ளது. போரில் இறந்த கணவர்களை முன்னிட்டு உயிர்நீத்த மனைவிகளுக்காக இந்த சதி கல்வெட்டு எழுப்பப் பட்டுள்ளது.

சண்டிகேஸ்வரா கோயிலுக்கு எதிரிலேயே அமைந்துள்ள உத்தன வீர பத்ரர் கோயில் வளாக சுவரை ஒட்டியே ஹம்பியின் பிரதான சாலை செல்கிறது என்பது குறிப்பிட த்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri