ஹரிஹரேஷ்வர் நகரத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலேயே இந்த பாகமண்டலா எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இது ஒரு அழகான சிற்றுலாத்தலமாக இப்பகுதியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
பல்லாண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த மராத்தா வம்சத்தைச் சேர்ந்த பேஷ்வாக்கள் வசித்த இடமாக இந்த பாகமண்டலா ஸ்தலம் அறியப்படுகிறது. பேஷ்வா ஸ்மாரக் அல்லது பேஷ்வா நினைவிடம் என்று அழைக்கப்படும் ஒரு நினைவுச்சின்னம் இங்கு பாகமண்டலாவில் அமைந்துள்ளது.இங்குள்ள பாங்கோட் கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
இப்பகுதியில் அடர்ந்த பசுமையான வனப்பகுதியின் மத்தியில் ஒரு படகுத்துறைமுகமும் அமைந்துள்ளது. ஜங்கிள் ஜெட்டி என்றழைக்கப்படும் இது பயணிகளால் பெரிதும் ரசிக்கப்படும் ஒரு அம்சமாகும். இந்த ஜெட்டியிலிருந்து பாகமண்டலா ஓடை வழியே ரத்னகிரி கோட்டைக்கு படகுப்போக்குவரத்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications