Search
  • Follow NativePlanet
Share

ஹர்சில் - ஏகாந்தத்தின் குடியிருப்பு!

9

உத்தரகண்ட் மாநிலத்தில்  அமைந்துள்ள அழகிய சிறு கிராமமான ஹர்சில், கடல் மட்டத்திலிருந்து 2620 மீ உயரத்தில் உள்ளது.  உத்ர காசியிலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமம், பாகீரத நதியின் கரையில் அமையப்பெற்றுள்ளது.

இந்து மத நம்பிக்கைகளின் படி, சத்ய யுகத்தின் போது, தெய்வீக நதிகளான,  பாகீரதிக்கும், ஜலந்தாரிக்கும்,  யார் பெரியவர்? என்கிற போட்டி நிலவியது. இந்த போட்டி, ஒரு கட்டத்தில் சூடான விவாதமாக மாறியது.

இந்நிகழ்ச்சியின் விளைவாக, இக்கிராமம் `ஹர்சில்' அல்லது `ஹர்சிலா' எனப்பெயர் பெற்றது. ஹர்சில் என்பது `ஹரி', மற்றும் `சிலா' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். இதில் ஹரி என்பது மஹா விஷ்ணுவையும் சிலா என்பது சிற்பத்தையும் குறிக்கும்.  

இக்கிராமம், சார்தாம் புனித யாத்திரையின் நான்கு முக்கிய இடங்களில் ஒன்றான கங்கோத்ரிக்கு மிக அருகில் உள்ளது. இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன.

அவற்றுள் கங்கோத்ரி தேசிய பூங்கா மற்றும் முகாபா கிராமம் அகியன பயணிகளை பெரிதும் கவர்கின்றன. புகழ்பெற்ற கங்கோத்ரி தேசிய பூங்கா, ஹர்சிலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. ஹர்சிலில் 1973 ல் நிறுவப்பட்ட பாதுகாப்பு வேளாண் ஆராய்ச்சி ஆய்வகம்(DARL) பயணிகளை பெரிதும் கவர்கிறது.

ஹர்சில் ஒரு கிராமமாதலால், இங்கு விமானம் மற்றும், ரயில் நிலையம் ஏதும் இல்லை. டேராடூனின்  ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஹர்சிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

ரிஷிகேஷில் உள்ள ரயில் நிலையம் ஹர்சிலுக்கு மிக அருகில் உள்ளது. ஹர்சிலுக்கு சுற்றுலா செல்ல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாதங்களும் உகந்ததாக கருதப்படுகின்றன.

ஹர்சில் சிறப்பு

ஹர்சில் வானிலை

சிறந்த காலநிலை ஹர்சில்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹர்சில்

  • சாலை வழியாக
    சுற்றுலா பயணிகள் சாலை மூலம் ஹர்சிலை எளிதாக அடையலாம். ஹர்சிலுக்கு உத்தர்காசி, டேராடூன், பார்கோட், புது டெஹ்ரி, மற்றும் ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரிஷிகேஷில் உள்ள ரயில் நிலையம் ஹர்சிலிலிருந்து 239 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ரிஷிகேஷ் ரயில் நிலையம், நாட்டின் பிற நகரங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கிருந்து ஹர்சிலை அடைய டாக்சிகளை ஏற்பாடு செய்து கொல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    டேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஹர்சிலுக்கு அருகில் 253 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து ஏராளமான விமனங்கள் டேராடூனிற்கு இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான வாடகை டாக்சிகளும் இயங்கி வருகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Sep,Sun
Check Out
07 Sep,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Sep,Sun
Return On
07 Sep,Mon