Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » ஈர்க்கும் இடங்கள் » பாய் தரம் சிங் குருத்வாரா

பாய் தரம் சிங் குருத்வாரா, ஹஸ்தினாபூர்

21

பாய் தரம் சிங் குருத்வாரா எனும் இந்த சீக்கிய கோயில் ஹஸ்தினாபூரிலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் சைஃப்பூர் எனும் இடத்தில் உள்ளது. இது பாய் தரம் சிங் எனும் சீக்கிய குருவின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கிறது. குரு கோவிந்த் சிங்கால் நேசிக்கப்பட்ட ஐந்து முக்கிய ‘பாஞ்ச் பியாரே’ எனப்படும் சீட குருமார்களில் இவர் முக்கியமானவர் ஆவார்.

குரு கோவிந்த தனது சீடர்களை நோக்கி தனது நோக்கத்திற்காக சுயதியாகம் செய்யவும் தயாராக இருப்பது யார் என்று கேட்டதாகவும், அதற்கு இந்த ஐந்து சீடர்களும் முன்வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சீக்கிய மார்க்கத்தை பரப்பும் பொறுப்பில் முதலில் நியமிக்கப்பட்ட அந்த ஐந்து பேரில் ஒருவரே இந்த பாய் தரம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் ஜாட் பிரிவினரை சேர்ந்தவரான பாய் தரம் சிங் அவர்களின் பூர்வாசிரமப்பெயர் தரம் தாஸ் என்பதாகும். இவர் பாய் சந்த் ராம் என்பவருக்கும் மாய் சபோ என்பவருக்கும் மகனாக ஹஸ்தினாபூர் பகுதியிலிருந்த சைஃப்பூர்-கரம்சந்த்பூர் எனும் இடத்தில் 1666ம் ஆண்டில் பிறந்துள்ளார்.

பிறப்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவராக விளங்கிய இவர் 13 வயதில் சீக்கிய மரபுக்கு அறிமுகமானார். இவர் தமது வாழ்நாள் ஞானத்தேடலிலேயே கழித்துள்ளார். நந்தேட் சாஹி குருத்வாராவில் 1708ம் ஆண்டு தமது 42வது வயதில் இவர் காலமானார்.

பாய் தரம் சிங் குருத்வாரா சீக்கிய இனத்தார் மத்தியில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக இருந்து வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat