12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜபுத்திர வீரர் பிரித்விராஜால் கட்டப்பட்ட ப்ரித்விராஜ் குய்லா எனப்படும் ப்ரித்விராஜ் கோட்டையும் இங்குள்ளது. ஜார்ஜ் தாமஸ் என்பவரால் 1798ல் இக்கோட்டை மீண்டும் கட்டப்பட்டது.
ஜார்ஜ் தாமஸின் ஆட்சி முடிந்தவுடன் இக்கோட்டை ராணுவ முகாமாக மாற்றப்பட்டது. 1857 சிப்பாய் கலகத்திற்குப் பின் புறக்கணிக்கப்பட்ட இக்கோட்டை சதுர வடிவில் 30ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
ப்ரித்விராஜ் சவுகானின் தோல்விக்குப் பின்னர் இக்கோட்டை வளாகத்தில் ஒரு மசூதியும் கட்டப்பட்டது. கோட்டையின் வாயில்களில் கடவுள்கள், பறவைகள், மிருகங்களின் அழகிய ஓவியங்கள் உள்ளன.
1982ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல ஜைன சிலைகள் இங்கு கிடைத்தன. 1937ல் இக்கோட்டை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications