நிசப்தம் நிரம்பிய தொடுபுழா நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த கீழார்குத்து அருவி அமைந்துள்ளது. பார்ப்பவரை சொக்க வைக்கும் இந்த அருவி ‘வானவில் நீர்வீழ்ச்சி’ என்றும் அழைக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் ஒரு பாறைப்பகுதியிலிருந்து உருவானதுபோல் இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. வருடமுழுதுமே வேகம் குறையாமல் இந்த நீர்வீழ்ச்சி ஊற்றுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நீர்வீழ்ச்சியை சூழ்ந்துள்ள காட்டுப்பகுதியில் பலவிதமான மூலிகைத்தாவரங்களும் நிறைந்துள்ளன. மலையேற்றம், பாறையேற்றம், சிகரமேற்றம், கூடாரவாசம் போன்றவற்றில் ஆர்வவுள்ள சாகசப்பயணிகளுக்கு இது மிகவும் ஏற்ற ஸ்தலமாகும். இயற்கைக்காட்சிகளை படமெடுப்பதில் ஆர்வம் உள்ள புகைப்பட ஆர்வலர்களுக்கும் உகந்த இடமாக இது காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications