Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடுக்கி » ஈர்க்கும் இடங்கள் » நெடுங்கண்டம் மலை

நெடுங்கண்டம் மலை, இடுக்கி

35

இடுக்கி மாவட்டத்திலுள்ள உடும்பன்சோலா தாலுக்காவில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. முன்னாருக்கும் தட்டேக்காட் பறவைகள் சரணாலயத்துக்கும் இடையில் சாலையை ஒட்டியே 3 கி.மீ நீளத்துக்கு இந்த நெடுங்கண்டம் எனும் சிறு மலைநகரம் வீற்றிருக்கிறது.

காபி, ஏலக்காய் மற்றும் மிளகு போன்ற பணப்பயிர் விளைச்சலுக்கு இப்பகுதி பெயர் பெற்று விளங்குகிறது. கேரளாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்று என சொல்லலாம்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டுப் பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள விவசாயிகள் சமீபத்தில் இங்கு வசிக்க துவங்கியுள்ளனர். விடுமுறையை வித்தியாசமாக ஓய்வாக ஒரு மலைக்கிராமத்தில் நீங்கள் கழிக்க விரும்பினால் தயங்காமல் இந்த நெடுங்கண்டம் மலை நகரத்துக்கு வந்து சேரலாம்.

கைலாசபாறை, கல்லுமேகல்லு, நெய்யாண்டிமலை ராமக்கால்மேடு மற்றும் மான்குத்திமேடு போன்ற அருகிலுள்ள முக்கியமான பிக்னிக் ஸ்தலங்களுக்கு இந்த நகரத்திலிருந்து சிற்றுலா மேற்கொள்ளலாம்.

இவை ஒவ்வொன்றுமே தனித்தன்மையான இயற்கைக்காட்சிகள் மற்றும் சொக்க வைக்கும் அழகைக் கொண்ட ஸ்தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தூவல் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சிக்கும் விஜயம் செய்து இயற்கையின் சாரலை அனுபவித்து மகிழலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed