உலகத்தில் உள்ள மிகவும் தனித்தன்மை வாய்ந்த இடங்களில் ஒன்றாக க்வய்ரம்பான்ட் பஜாரில் இருக்கும் இமா கெய்தெல் என்ற முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் சந்தை உள்ளது.
முழுவதும் பெண்களால் நடத்தப்பட்டு வரும் இமா கெய்தெல் மார்க்கட்டில் உங்களுக்கு வேண்டியது எதுவும் கிடைக்கும். இந்த சந்தையின் ஒரு முனையில் பெண்ணொருவர் குழப்பமான சத்தங்களினூடாக மீன்களை விற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு முனையில் மற்றொரு பெண் புதிதாக நெய்யப்பட்ட கம்பளி ஆடைகளை விற்பனை செய்து தன்னுடைய வாடிக்கையாளரை மகிழச் செய்து கொண்டிருப்பார்.
சுமார் 100 ஆண்டுகள் பாரம்பரியத்துடன் செயல்பட்டு வரும் இமா கெய்தெல், பெண்கள் சமத்துவம் மற்றும் சுதந்திரத்தின் சுத்தமான அடையாளமாகும். 3000 பெண்களுக்கு மேல் கடை விரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் இந்த இடத்தில், ஒரு ஆண் கூட கடை வைத்திருப்பதை பார்க்க முடியாது.
காய்கறிகளிலிருந்து மீன்கள் வரையிலும், கைத்தறிகளிலிருந்து கைவினைப்பொருட்கள் வரையிலும், இமா கெய்தெல் சந்தையில் உங்களால் வாங்கிட முடியும்.
இமா கெய்தெல் என்ற மணிப்புரி மொழி வார்த்தையில் 'இமா' என்றால் 'தாய்' என்றும், 'கெய்தெல்' என்றால் 'சந்தை' என்றும் அர்த்தமாகும்.



Click it and Unblock the Notifications