ராணி மகால் அல்லது ராணி அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை இரண்டு மாடிகளைக் கொண்டிருக்கிறது. பெண்கள் தங்குவதற்காக 1720ல் ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவரால் கட்டப்பட்டது.
அவருடைய ராணிகள் தங்குவதற்காக இந்த அரண்மனையை அவர் கட்டினார். இந்த அரண்மனையில் அமைந்திருக்கும் திறந்தவெளி பால்கனிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். மிகப் பெரிய பரந்து விரந்த குடைபோல் இருக்கும் இந்த அரண்மனையின் மேற்கூரை பண்டைய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இந்த அரண்மனை ஒரு பாதுகாப்புத் தளமாக விளங்குகிறது. இந்த அரண்மனையில் இருக்கும் சிறிய அறைகள் அந்த கால மன்னர்களின் எளிய வாழ்க்கை முறையை எடுத்து இயம்புகிறது.
மேலும் இந்த அரண்மனை முகலாய, இரஜபுத்திர மற்றும் மால்வா அரசுகளின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
இந்த அரண்மனையில் அமைக்கப்பட்டிருக்கும் முக்கோண வடிவிலான தோட்டம் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரக்கூடிய முக்கிய அம்சம் ஆகும். இந்த அரண்மனையில் ஒரு திறந்தவெளி மண்டபமும் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications