Search
  • Follow NativePlanet
Share

ஜாகேஷ்வர் - சக்திகளின்உறைவிடம்!

13

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1870 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம்தான் ஜாகேஷ்வர். இவ்விடம் லாகுலிஷ் சைவத்தின் மையமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜதகங்கா நதி பள்ளத்தாக்கின் அருகே அமைந்துள்ள இவ்விடம் லஷ் தியோதர் மரங்களின் பசுமையால் அழகுற காட்சித்தருகின்றது.

12 ஜோதிலிங்கத்தில் 8-வது ஜோதிலிங்கம் அமையப்பட்ட இடம் என்பதால் ஜாகேஷ்வர் மிகவும் பிரபலமான இடமாக கருதப்படுகிறது. 9-ம் மற்றும் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட 124 பெரிய மற்றும் சிறிய கோவில்களை உள்ளடக்கிய ஜாகேஷ்வர் நகரத்தை கோவில் நகரம் என்று அழைக்கின்றனர்.

தந்தேஷ்வர் கோவில், ஜாகேஷ்வர் கோவில், சாண்டிகா கோவில், மஹாமிருத்யுஞ்சயா கோவில், குபெர் கோவில், நவகிரக கோவில், மற்றும் நந்தா தேவி கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களை இங்கு காணலாம்.

இதில் மஹாமிருத்யுஞ்சயா கோவில் மிகவும் பழமையானது, மற்றும் தண்டேஷ்வர் கோவில் எல்லா கோவில்களையும் விட பெரியது. பட் ஜகேஷ்வர் கோவில், புஷ்தி பகவதி மா மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் போன்ற இடங்கள் இங்கு காணவேண்டிய புகழ்வாய்ந்த தலங்களாகும்.

ஜூலை 15 ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது இந்து மாதமான ஷ்ரவன் மாதத்தில் ஜாகேஷ்வரில் கொண்டாடப்படும் மழைக்கால விழா புகழ்பெற்ற விழாவாகும். மேலும் இந்து மதத்தில் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரியை இங்கு பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஜாகேஷ்வர் செல்ல விமான போக்குவரத்து, ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் உள்ளது. பந்த் நகர் விமான நிலையமும், கத்கோடம்  ரயில் நிலையமும் இங்கிருந்து மிக அருகில் உள்ளன. பித்தோகார்க், ஹல்த்வானி மற்றும் அல்மோரா போன்ற இடங்களிலிருந்தும் ஜாகேஷ்வர் செல்ல அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

இங்கு கோடைப்பருவம் அனுபவிக்க ஏதுவாக இருப்பதால் ஜாகேஷ்வர் செல்ல கோடைப் பருவமே சிறந்தது.

ஜாகேஷ்வர் சிறப்பு

ஜாகேஷ்வர் வானிலை

சிறந்த காலநிலை ஜாகேஷ்வர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜாகேஷ்வர்

  • சாலை வழியாக
    இங்கிருந்து வழக்கமான பஸ் சேவைகள் மூலம் அருகிலுள்ள இடங்களுக்கு செல்லும் வசதிகள் உண்டு. அல்மோரா, பித்தோகார்க், மற்றும் ஹல்த்வானி போன்ற இடங்களில் இருந்து ஜாகேஷ்வர் பகுதிக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜாகேஷ்வரில் இருந்து கத்கோடம் ரயில் நிலையம் மிக அருகில் உள்ளது. இந்த ரயில் நிலையம் இதன் வழக்கமான ரயில்கள் மூலம் லக்னோ, தில்லி மற்றும் கொல்கத்தா போன்ற இந்திய இடங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து டாக்சிகளையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பந்த் நகர் விமான நிலையம் ஜாகேஷ்வரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் வழக்கமான விமானங்கள் மூலம் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லி விமான நிலையமானது பெரும் நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை, மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பந்த் நகர் விமான நிலையத்தை அடைய டாக்சிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue