Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஜெயின்டியா மலைகள்

ஜெயின்டியா மலைகள் - கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்!

31

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை. ஜெயின்டியா மலைகளுக்கான சுற்றுலாப் பயணம் இயற்கையழகை மட்டும் கவர்ச்சியாக கொண்டிருக்காமல், இன்றைய பங்களாதேஷ் நாட்டுன் தொடர்புடைய வளமான வரலாற்றையும் கொண்டுள்ளது.

தற்போதைய பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஜெயின்டியாபூர் என்ற நகரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த ஜெயின்டியா அரசர், நார்டியாங் என்ற சிறிய கிராமத்தை தன்னுடைய கோடைக்கால தலைநகரமாக பயன்படுத்தினார். இதன் காரணமாக இந்த பகுதிக்குள் எளிதில் சென்று வருவதும், கலாச்சார பரிமாற்றங்களும் அதிகமாகி விட்டன.

ஜெயின்டியா மலைகள் என்பது மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய இரு மாவட்டங்களையும் குறிக்கும். மேற்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக ஜோவாய் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக க்லீஹ்ரியாட் ஆகியவை உள்ளன

ஜெயின்டியா மலைகளில் உள்ள நார்டியாங் பகுதியில் மிகப்பெரிய ஒற்றைகற் சிற்பங்களின் சேகரிப்புகள் உள்ளன. இங்கிருக்கும் துர்கா தேவி கோவிலும் மிகவும் முக்கியமான பார்வையிடமாகும்.

ஜெயின்டியா மலைகளை அடையும் வழிகள்

மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் ஷில்லாங்கில் இருந்து 65 கிமீ தொலைவில் ஜோவாய் உள்ளது. இந்த இரு நகரங்களுக்கும் இடையில் சுமார் 2 மணி நேர பயண தூரம் மட்டுமே!

ஜெயின்டியா மலைகளுக்கு செல்ல சாலை போக்குவரத்து தான் முதன்மையான வசதியாக உள்ளது. ஜெயின்டியா மலைகளின் சுற்றுலாத் தலங்களை காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள் ஜோவாயில் தங்கலாம்.

ஜெயின்டியா மலைகளின் பருவநிலை

ஜெயின்டியா மலைகளில் மழைக்காலங்களில் கனமான மழைப்பொழிவு இருக்கும். கோடைக்காலத்தில் மகிழ்ச்சியான சீதோஷ்ணமும் மற்றும் குளிர்காலத்தில் குளிராகவும் இவ்விடம் இருக்கும். மழைப்பொழிவு குறைவாக இருக்கும் கோடைக்காலங்களில் இங்கே சுற்றுலாப் பயணிகள் வரலாம்.

ஜெயின்டியா மலைகளை அடையும் வழிகள்

ஜெயின்டியா மலைகள் சாலைப் போக்குவரத்தால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

ஜெயின்டியா மலைகள் சிறப்பு

ஜெயின்டியா மலைகள் வானிலை

சிறந்த காலநிலை ஜெயின்டியா மலைகள்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜெயின்டியா மலைகள்

  • சாலை வழியாக
    ஷில்லாங்கை திரிபுரா மற்றும் அஸ்ஸாமின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலலை எண் 44 ஜெயின்டியா மலைகளின் வழியாக செல்கிறது. எனவே இந்த இரு நகரங்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தை இந்நெடுஞ்சாலை பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஷில்லாங்கில் இருந்து ஜெயின்டியா மலைகளில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து வசதிகளை எளிதில் பெறுகிறார்கள். உள்ளூர் பேருந்து சேவைகள் மற்றும் டாக்ஸிகளும் இங்கே கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மேகாலயா மாநிலத்தில் இரயில் நிலையங்கள் கிடையாது. எனவே அருகிலுள்ள கௌகாத்தி இரயில் நிலையத்தை பயன்படுத்தலாம். இந்த இரயில் நிலையத்திலிருந்து சுற்றுலா பயணிகள் நேரடியாக ஷில்லாங் செல்ல முடியும். ஷில்லாங் வந்த பின்னர் அங்கிருந்து ஜெயின்டியா மலைகளுக்கு தொடர்ச்சியாக இயக்கப்படும் பேருந்துகள் அல்லது டாக்ஸிகளில் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஜெயின்டியா மலைகளுக்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாக உம்ரோய் விமான நிலையம் உள்ளது. தற்போது செயல்பாட்டில் இல்லாததால், கௌகாத்தியில் உள்ள கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தை பயணிகள் தேர்ந்தெடுப்பது நல்லது. சுற்றுலாப் பயணிகள் ஷில்லாங் வரையிலும் வந்து அங்கிருந்து ஜோவாய் அல்லது க்லீஹ்ரியாட் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu