பூதங்கள், பேய்கள் மற்றும ஆன்ம சக்திகளின் அரசராக கருதப்படும் பூதநாதர் என்ற சிவபெருமானின் தலமாக இருப்பதால் இந்த கோவில் பூதேஸ்வர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
எனவே தான், வட இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான இறுதி சடங்குகளில் சிவ பெருமான் முதன்மையாக காட்சியளிப்பார். ஒரு மனிதர் இறக்கும் போது மிஞ்சியிருப்பது அவரின் ஆன்மா மட்டுமே!
ஜின்ட்டின் அரசராக இருந்த ராஜா ரன்பீர் சிங்கினால் கட்டப்பட்ட இந்த கோவில் கோஹனா சாலையில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றிலும் பெரிய குளம் அல்லது தலாப் உள்ளதால், இது அமிர்தசரஸ் பொற்கோவிலின் அமைப்பையொத்ததாக உள்ளது. எனவே தான், இந்த கோவில் உள்ள இடம் ராணி தலாப் என்று அழைக்கப்படுகிறது.
அரசி நீராடும் பொருட்டாகவே இந்த குளம் கட்டப்பட்டதன் காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், அரசி வருவது யாருக்கும் வெளிப்படையாக தெரிவதை தவிர்க்கும் பொருட்டாக அரண்மனையிலிருந்து இந்த குளத்திற்கு ஒரு சுரங்கப்பாதையையும் அரசர் உருவாக்கினார்.
இந்த சுரங்கப்பாதையின் சிதைவுகளை இன்றும் கூட காண முடியும். இந்த கோவிலில் சில ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்த இடம் ஜின்ட் இராஜ குடும்பத்தின் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications