ஜெனனா மஹால் என்பது அக்கால ராஜகுல மகளிர் வசித்த அரண்மனைப்பகுதியாகும். இது ஜோத்பூர் நகரத்திலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை பெண்களை பாதுகாக்க வேண்டி உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. திருநங்கைகள் இந்த அரண்மனையை இரவும் பகலும் காவல் புரிந்துள்ளனர். பாறைச்சிற்ப வடிப்புகள் மற்றும் மணற்பாறைக்கற்கள் இந்த அரண்மனையின் அழகை கூட்டுகின்றன.
ஜெய் போல், ஜோத்பூர்ஜோத்பூர் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு மலையின் மீது அமைந்துள்ள மெஹ்ரான்கர் கோட்டையில் காணப்படும் வரலாற்று சின்னங்களில் ஒன்று இந்த ‘ஜெய் போல்’ எனப்படும் ‘வெற்றி வாசல்’.
பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் மெஹ்ரான்கர் கோட்டையின் ஏழு வாயில்களில் இது மிக பிரசித்தமானதாக அறியப்படுகிறது. ஜெய்போல் நுழைவாயில் 1806ம் ஆண்டு மார்வார் மஹாராஜா மான் சிங் அவர்களால் கட்டப்பட்டதாகும்.
ஜெய்பூர் மற்றும் பிக்கானேர் ஆகிய எதிரி நாட்டு மன்னர்களை மார்வார் வம்சம் வெற்றிகொண்டதன் ஞாபகார்த்த சின்னமாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வாசலுக்கு அருகிலேயே யுத்தத்தின்போது பீரங்கிக்குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்ப்பகுதியைக் காணலாம்.



Click it and Unblock the Notifications