ஜோர்கட்-ன் புகழ் மிக்க வரலாற்றுத் தலமாகவும், வணிக மையமாகவும் கார் அலி விளங்குகிறது. அஹோம் அரசின் ஆட்சியில், மோயாமரியாஸ்களுடன் அவர்கள் போரிலிருந்த போது கார் அலி கட்டப்பட்டுள்ளது.
செயோனி அலி முதல் நாகா மலைகள் வரையிலும் சுற்றிலும் பெரிய வேலி போல கார் அலி கட்டப்பட்டுள்ளது. பகைவர்களின் அச்சுறுத்தல்களிலிருந்து அஹோம் ராஜ்ஜியத்தை காப்பதே இந்த சுற்றுச்சுவரை கட்டியதன் நோக்கமாகும்.
இந்த வரலாற்றுத் தலத்தில் குழப்பம் தரும் வகையில் பல்வேறு பாதைகள் உள்ளதால் பிபுட்தி கார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மேலும், ஜோர்கட்டை மோயாமாரியாஸ்கள் தாக்க நினைக்கும் வேளைகளில் இந்த சுற்றுச்சுவரை கண்டு தடுமாறியதன் காரணமாக இந்த சுவர்கள் பிபுட்தி கார் என்ற பெயரை பெற்றதாகவும் நம்பப்படுகிறது.
இன்றைய நாட்களில் ஜோர்கட் நகரத்தின் முக்கியமான சந்தையாக கார் அலி உள்ளது. இங்கே ஷாப்பிங் வரும் சுற்றுலாப் பயணிகள் அஹோம் இனத்தவரின் நினைவுச் சின்னங்கள் இருப்பதை இன்றும் காண முடியும். குறுகலான மற்றும் ஜன நெருக்கடி மிகுந்த கார் அலி சந்தைக்கு வருவது ஒரு பயனுள்ள அனுபவமாக இருக்கும்



Click it and Unblock the Notifications