கடப்பா நகரில் அமைந்திருக்கும் சூஃபி ஆலயமான அமீன் பீர் தர்காவுக்கு மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மத நல்லிணக்கத்தின் சின்னமாக அமீன் பீர் தர்கா திகழ்ந்து வருகிறது.
இங்கு வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பீருல்லாஹ் ஹுசைனி, இரண்டாம் அருஃபுல்லாஹ் ஹுசைனி ஆகிய இரண்டு சூஃபி ஞானிகளின் ஆசியை பெறுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த இரண்டு சூஃபி ஞானிகளின் சமாதி இங்கு இருப்பதோடு, அவர்களிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது பலிக்கும் என்று பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. இவ்விரண்டு சூஃபி ஞானிகளில் பீருல்லாஹ் ஹுசைனி முஹமது நபியின் வழித்தோன்றலாக பார்க்கப்படுகிறார்.
அதோடு இந்த இரண்டு சூஃபி ஞானிகளின் சந்ததியினர் இன்னும் இங்கு சேவை செய்து வருவதோடு, மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்ட காவி உடையில் காட்சியளிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications