தேவுனிகடப்பா அதன் சமயச் சிறப்பு காரணமாக ஹிந்துக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது. அதோடு திருமலை திருப்பதி செல்லும் யாத்ரீகர்கள் தேவுனிகடப்பாவுக்கு சென்று வழிபட்டு செல்லாமல் தங்களுடைய யாத்ரீகம் முழுமையடையாது என்று நம்புகின்றனர்.
திருமலை தோலி கடப்பா தேவுனிகடப்பா என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் தேவுனிகடப்பாவில் விஜயநகர பேரரசின் காலந்தொட்டு ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது.
இந்தக் கோயிலின் சுவாமி வெங்கடேஸ்வரர் சிலை குரு கிருபாச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக அந்தக் காலங்களில் இது 'கிருபாவதி க்ஷேத்ரம்' என்று அழைக்கப்பட்டு வந்தது.
திருப்பதி செல்லும் வழியில் பக்தர்கள் இந்த ஸ்தலத்துக்கு வந்து அன்னமாச்சார்யாவையும், பொட்லூரி வீரபத்திர சுவாமியையும் தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். இந்த சமயங்களிலும் சாதாரணமாக எல்லா சனிக்கிழமைகளிலும் தேவுனிகடப்பாவில் யாத்ரீகர்கள் மற்றும் பயணிகள் கூட்டம் ஜேஜேவென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications