கல்பெட்டா நகரிலிருந்து 15 கிலொமீட்டர் தொலைவில் உள்ள பதின்ஜரதரா எனும் நகருக்கு வெகு அருகே வரம்பெட்டா மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுடன், வயநாடு மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் மசூதியாகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
வரம்பெட்டா மசூதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஆண்டுத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அப்போது மத வேறுபாடின்றி கேரளாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரம்பெட்டா மசூதிக்கு வந்து செல்வார்கள்.



Click it and Unblock the Notifications