Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» காமர்புகுர்

காமர்புகுர் - கைவினைப் பொருட்களின் சொர்க்கம்!

5

மேற்கு வங்க மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான், இன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் பெயர் வைத்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணர் பிறந்தார். மேலும், புகழ் பெற்று விளங்கிய விவேகானந்தரின் ஆசிரியராகவும் இவர் இருந்தார். இராமகிருஷ்ணரின் வாழ்க்கையை சிறப்பிக்கும் பொருட்டாக இவர் பிறந்த வீடு சிறப்பிக்கப்பட்டும், ஒரு சிறிய கோவிலும், பிறப்பிடமும் இவருக்காக எழுப்பப்பட்டும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மதநம்பிக்கைகளில் புத்துணர்ச்சி பெறும் பொருட்டாக பக்தர்கள் வந்து செல்லும் ஆசிரமமாகவும் இவ்விடம் உள்ளது.

குடிசைத் தொழில்கள்

இது மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளை 'இயற்கைக்கு அருகில்' கொண்டு செல்லக்கூடிய சில அனுபவங்களுக்காகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த மேற்கு வங்க கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.

காமர்புகுர் கிராமம் அதன் தனித்தன்மை வாய்ந்த குடிசைத் தொழில் பொருள்களான கருவேல மரக்குச்சிகளால் செய்யப்பட்ட ஹுக்காக்கள், ஜலேபி மற்றும் நபாட் போன்ற இனிப்பு பண்டங்கள் மற்றும் பல துணி மற்றும் ஜவுளி பொருட்களுக்காக புகழ் பெற்ற இடமாகும்.

திருவிழாக்களும், கொண்டாட்டங்களும்!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது காமர்புகுர் கிராமம் களைகட்டத் தொடாங்கி விடும். சிவ பெருமானுக்காக இங்கு நடைபெறும் திருவிழாவின் போது, உள்ளூர்வாசிகள் பெருமகிழ்ச்சியுடன் மானஸா என்ற பெண் தெய்வத்தையும் வணங்குவார்கள்.

இந்த திருவிழாவின் போது மந்திரங்களை உச்சாடனம் செய்வதும், சுமார் 72 மணி நேரத்திற்கு பாடல்களை பாடிக் கொண்டிருப்பதும் முக்கியமான சடங்குகளாக உள்ளன. எல்லா பாடல்களுமே பக்தி பாடல்களாகவும், அதனால் காண வேண்டிய பக்தி மணம் மிக்க கிராமமாகவும் காமர்புகுர் உள்ளது.

காமர்புகுரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

திருவிழாக்காலம் அல்லாமல், பிற நாட்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலிருக்கும் தாக்கேஸ்வர் கோவிலுக்கு செல்வதையோ அல்லது முந்தைய காலத்தில் இந்த கிராமம் முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் இருந்ததை இன்றும் சான்றாக நின்று விளக்கிக் கொண்டிருக்கும் மாண்டாரா கோட்டைக்கோ செல்வதன் மூலம் பயன் பெற முடியும்.

காமர்புகுரை அடையும் வழிகள்

முக்கியமான சுற்றுலாத் தலமாக இருக்கும் காமர்புகுர் கிராமத்திற்கு விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக பல்வேறு போக்குவரத்து வசதிகள் இயக்கப்படுகின்றன.

காமர்புகுர் சிறப்பு

காமர்புகுர் வானிலை

சிறந்த காலநிலை காமர்புகுர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது காமர்புகுர்

  • சாலை வழியாக
    நகரத்திலிருந்து 93.7 கிமீ தொலைவில் இருக்கும் காமர்புகுர் கிராமத்தை, அஹில்யாபாய் ஹோல்கார் சாலை வழியாக அடைந்திட முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நாடு முழுவதும் தொடர்பு கொண்டுள்ள கொல்கத்தா இரயில் நிலையத்திலிருந்து காமர்புகுரை எளிதில் அடைந்திட முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    முக்கியமான இந்திய மற்றும் சர்வதேச நகரங்களுடன் தொடர்பிலுள்ள கொல்கத்தா விமான நிலையம் வழியாக காமர்புகுர் வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Jul,Sat
Return On
26 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Jul,Sat
Check Out
26 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Jul,Sat
Return On
26 Jul,Sun