சக்கபாட் எனும் இந்த கிராமம் புல்பணியிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ளது. இக்கிராமப்பகுதியில் சைவ வழிபாடு பழக்கத்தில் இருந்து வருகிறது. பிருபாக்ஷ்யா என்ற பெயரில் இங்கு சிவபெருமான் வழிபடப்படுகிறார்.
பழமையான புனித ஆறாக கருதப்படும் பூதகங்கா ஆற்றின் கரையில் இந்த சிவன் கோயில் வீற்றிருக்கிறது. இந்த கோயிலின் ஒரு விசேஷ அம்சமாக இந்த வளாகத்தில் உள்ள சிவலிங்கம் மற்றும் மரங்கள் யாவுமே தெற்கு திசை நோக்கி சாய்ந்து காட்சியளிக்கின்றன.
இதே கிராமத்தில் அனந்தேஸ்வரர் மற்றும் ஜகேஸ்வரர் கோயில்களும் அமைந்துள்ளன. சிவராத்திரி, ராஷ பூர்ணிமா மற்றும் ஷிதால் ஷக்தி ஆகிய மூன்று முக்கியமான திருவிழாக்கள் இந்த சிவன் கோயில்கள் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சக்கபாட் கிராமத்தை சுற்றி பசுமையான காட்டுப்பகுதியும் காணப்படுகிறது. புல்பணியிலிருந்து இந்த கிராமத்திற்கு விஜயம் செய்ய வசதியாக பேருந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.
ஆன்மீக ஆர்வலர்கள் கந்தமால் பகுதிக்கு விஜயம் செய்யும் போது தவறாமல் பார்க்க வேண்டிய இடமாக இந்த சக்கபாட் கிராமம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications