கத்ரமால் எனும் எழிற்பிரதேசம் புல்பணியிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் பல்வேறு இயற்கை எழில் சார்ந்த அம்சங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. இப்பகுதியில் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்று காணப்படுகிறது.
உச்சியிலிருந்து பசுமையான காடுகளின் வழியே வழிந்து ஒரு தடாகத்தில் ஊற்றுவது போன்ற அமைப்புடன் இந்த நீர்வீழ்ச்சி காட்சியளிக்கிறது. கத்ரமால் ஸ்தலத்திற்கு செல்லும் சாலை செப்பனிடப்பட்டதாக இல்லாமல் கரடு முரடான கற்களுடன் காட்சியளிக்கிறது.
இருப்பினும் இயற்கைக்காட்சிகள் நிரம்பிய பாதை என்பதால் பயணிகளுக்கு உற்சாக அனுபவமாகவே இருக்கும். மற்றொரு சுவாரசிய அம்சமாக இந்த நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள மீன்கள் உணவை எதிர்பார்த்து நீருக்கு மேலே துள்ளி குதிப்பதை சொல்லலாம்.
பயணிகள் இந்த மீன்களுக்கு பொரி மற்றும் பிஸ்கெட்டுகள் போன்றவற்றை போடுகின்றனர். பாறைப்பாங்கான மலைகளின் மீது உயரமாக வளர்ந்திருக்கும் பலவகையான மரங்களை இந்த கத்ரமால் நீர்வீழ்ச்சிப்பகுதியில் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். நகர வாழ்க்கையில் அலுப்புற்று இயற்கை வாசனையை நுகர விரும்பும் மனங்களுக்கு இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் மிகவும் ஏற்றது.



Click it and Unblock the Notifications