புடுதி நீர்வீழ்ச்சி புல்பணியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் 100 மீ உயரத்தில் மலைப்பாறைகளின் மீது இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது.
பரபரப்பும் சந்தடியும் நிரம்பிய நகர்ப்பகுதியிலிருந்து கானகத்தின் அமைதிச்சூழலோடு காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் மனதுக்கு சாந்தத்தை அளிப்பதாய் உள்ளது.
இந்த பிரதேசத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் நடுவே பெரும் இரைச்சலோடு நீர்வீழ்ச்சி விழும் சப்தத்தையும் நம்மால் கேட்க முடிகிறது. இயற்கைக்காட்சிகளை படம் பிடிக்க விரும்பும் புகைப்பட ஆர்வலர்களுக்கு இந்த நீர்வீழ்ச்சி மிகவும் பொருத்தமான இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் பல சினிமா படப்பிடிப்புகளும் இந்த ரம்மியமான இயற்கைச்சூழலில் நடத்தப்பட்டிருக்கின்றன. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு மக்கள் இங்கு பிக்னிக் சிற்றுலா மேற்கொள்வதை விரும்புகின்றனர்.
இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு நல்ல போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. குளுமையான சூழல் நிலவும் குளிர்காலம் இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.



Click it and Unblock the Notifications