செறுகுண்ணு எனும் இந்த சிறுநகரம் கண்ணூர் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ஒரு முக்கியமான ஆன்மிக ஸ்தலமாக அறியப்படுகிறது. செறுகுண்ணு எனும் பெயருக்கு மலையாளத்தில் சிறிய மலை என்பது பொருளாகும். இந்நகரத்தை சுற்றிலும் சிறிய மலைகள் அதிகமாக காணப்படுவதால் இப்பெயர் வந்துள்ளது.
செறுகுண்ணு பகுதியில் ‘துருத்துகள்’ எனப்படும் ஏராளமான குட்டித்தீவுகளும் அமைந்துள்ளதால் இப்பிரதேசம் பிரமிப்பூட்டும் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. தவம் சர்ச் (புராதன ரோமன் கத்தோலிக்க தேவாலயம்), ஒலியங்கரா ஜுமா மஸ்ஜித் (சூஃபி சமாதி ஸ்தலம்) மற்றும் செயிண்ட் மார்ட்டின் டே போரஸ் ஹாஸ்பிடல் (மிஷன் ஹாஸ்பிடல்) போன்றவை இந்நகரத்தின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாகும்.
அன்னபூரணீஸ்வரி கோயில் அல்லது செறுகுன்னிலம்மா கோயில் என்றழைக்கப்படும் கோயில் செறுகண்ணு நகரத்தில் பக்தர்களும் பயணிகளும் அதிகம் விஜயம் செய்யும் ஸ்தலமாக காணப்படுகிறது.
இந்தியாவின் அன்னபூரணி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒருசில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். உணவுக்கான பெண் தெய்வத்துக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில் அன்னதான சடங்கு பிரசித்தமாக நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications