Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்செலோ

ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்செலோ, கண்ணூர்

25

கண்ணூர் கோட்டை என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்சலோ கண்ணூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கேற்ற காட்சித்தளமாய் விளங்கும் இக்கோட்டை ஆரவாரிக்கும் அரபிக்கடலை நோக்கியவாறு எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் போர்த்துகீசிய வைசிராய் என்று அறியப்படும் டாம் ஃப்ரான்சிஸ்கோ டீ அல்மெய்ட் என்பவரால் 1505ம் ஆண்டு இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இது எதிரிகளின் முற்றுகையிலிருந்து இப்பகுதியை பாதுகாக்கும் விதத்தில் உறுதியான அரண் போன்று நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

பின்னாளில் டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டபின் சில புதுப்பிப்புகளும் இக்கோட்டையின் அமைப்பில் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெறும் வரை இக்கோட்டை ஆங்கிலேயப் படைத்தளமாகவும் விளங்கியுள்ளது.

இன்று கண்ணூர் கோட்டை இந்தியத்தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. கண்ணூர் பிரதேசத்தின் வரலாற்றுப் பின்னணியோடு நெருங்கிய தொடர்புடையதால் இந்த கோட்டை ஏராளமான சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

இந்த கோட்டை எல்லா நாட்களிலும் திறந்துள்ளது.

பார்வை நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

நுழைவுக்கட்டணம்: இலவச அனுமதி

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun