Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » பய்யம்பலம் பீச்

பய்யம்பலம் பீச், கண்ணூர்

84

பய்யம்பலம் பீச் எனப்படும் ரம்மியமான வெண்மணற்பரப்பைக்கொண்ட இந்த கடற்கரை கண்ணூர் பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். கண்ணூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கடற்கரையை சாலை மார்க்கமாக எளிதில் வந்தடையலாம்.

தங்கநிறக்கதிர்களை சிதறடித்தபடியே சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை இந்த கடற்கரையில் கண்டு ரசிப்பதற்காக ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர். புத்துணர்ச்சியூட்டும் இந்த தரிசனம் பார்வையாளர்களின் மன அலுப்புகளை போக்கி உற்சாகப்படுத்துகிறது.

பய்யம்பலம் பீச் கடற்கரையின் முக்கியமான கவர்ச்சி அம்சமாக தாயும் சேயுமாக வடிக்கப்பட்டுள்ள ஒரு சிலை பார்வையாளர்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மலம்புழாவிலுள்ள புகழ்பெற்ற யக்ஷி சிலையை வடித்த புகற்பெற்ற சிற்பி கானாயி குஞ்சிராமன் என்பவரால் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. அலங்கார தோட்டத்தின் நடுவில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிலை பயணிகளை கவரும் அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இந்த கடற்கரையை ஒட்டியே நன்கு பராமரிக்கப்பட்ட பூங்காத்தோட்டம் ஒன்றும் காணப்படுகிறது. பயணிகள் இந்த பூங்காத்தோட்டத்தில் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகள் நிறைந்த அரபிக்கடலை ரசித்துக்கொண்டிருக்கலாம்.

ஸ்வதேஷாபிமானி ராமகிருஷ்ண பிள்ளை, பாம்பம் மண்டவன், ஏ.கோ.கோபாலன் மற்றும் கே.ஜி. மாரார் போன்ற பிரபல்யமான சமூகத்தலைவர்களின் சமாதிகளும் இந்த கடற்கரையில் அமைந்துள்ளன.

தூய்மையான மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை கழிப்பதற்கேற்ற பாதுகாப்பான சூழலை கொண்டிருப்பது இந்த கடற்கரையின் விசேஷ அம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Jun,Mon
Return On
09 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Jun,Mon
Check Out
09 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Jun,Mon
Return On
09 Jun,Tue