தர்மதம் நகர நிலப்பகுதியிலிருந்து 100 மீட்டர் தள்ளி இந்த குறுந்தீவு அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திட்டு தென்னை மரங்கள் மற்றும் பசுமையான தாவரச்செழிப்புடன் காட்சியளிக்கிறது. பசுமைத்தீவு என்ற பொருத்தமான பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
தர்மதம் தீவு தளசேரியிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தூரத்திலுள்ள தர்மதம் நகரப்பகுதியில் அமைந்துள்ளது. முழுப்பிலான்காட் கடற்கரையிலிருந்து பார்த்தால் இந்த தீவு ஒரு வண்ண ஓவியம் போன்று காட்சியளிக்கிறது.
பிறந்த குழந்தை போன்ற இயற்கையின் தூய்மையுடன் ஒளிரும் இந்த தீவுப்பகுதிக்கு அலை இறக்கம் உள்ள நேரத்தில் நீரில் நடந்தே சென்றடைய முடியும். இருப்பினும் திடீரென்று அலைகள் உயரக்கூடிய வாய்ப்புள்ளதால் தகுந்த துணை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் எச்சரிக்கையாக செல்வது அவசியம்.
மற்றும் ஒரு முக்கியமான தகவல் இந்த தீவு தனியாருக்கு சொந்தமானது என்பதாகும். எனவே தீவுக்கு செல்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியுள்ளது.



Click it and Unblock the Notifications