Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » குண்டர்ட் பங்களா

குண்டர்ட் பங்களா, கண்ணூர்

84

குண்டர்ட் பங்களா எனும் புகழ்பெற்ற பாரம்பரிய கட்டிடச்சின்னமான இது கண்ணூர் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பங்களா தலசேரி நகரத்துக்கு அருகில் இல்லிகுண்ணு எனும் அழகிய மலையில் வீற்றிருக்கிறது. இந்த இடத்தின் வழியே ஒரு ஆறும் ஓடுவதால் இயற்கை வனப்பின் ஜொலிப்பு இங்கு பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.

1839ம் ஆண்டிலிருந்து டாக்டர் ஹெர்மன் என்பவர் இந்த மாளிகையை தன் வசிப்பிடமாக கொண்டு தனது இலக்கியம், கல்வி, மதம் போன்ற பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்துள்ளார்.

புகழ்பெற்ற மதப்பிரச்சாரகரும் கல்வியாளருமான இந்த ஜெர்மானியர் முதன்முதலாக ஒரு மலையாள அகராதியையும் தொகுத்து அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்யசமாச்சாரம் எனும் முதல் மலையாள மொழி பத்திரிகையையும் மற்றொரு பதிப்பான பஸ்ச்சிமோதயம் எனும் பதிப்பையும் வெளியிட்டவர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

20 வருடங்கள் குண்டர்ட் எனும் அறிஞர் வசித்த இம்மாளிகை ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட சின்னமாக கருதப்படுகிறது. நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும், குண்டர்ட் மெமோரியல் சர்ச் மற்றும் அவரது சமாதி போன்றவை இந்த பங்களாவுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

ஆங்கிலேய பாணியில் கட்டப்பட்ட இந்த இம்மாளிகையும் அதனை சுற்றியுள்ள எழிற்காட்சிகளும் இந்த ஸ்தலத்தை முக்கியமான சுற்றுலா அம்சமாக மாற்றியுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed