Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » ஹோலி டிரினிட்டி கதீட்ரல்

ஹோலி டிரினிட்டி கதீட்ரல், கண்ணூர்

84

ஹோலி டிரினிட்டி கதீட்ரல் சர்ச் எனப்படும் இந்த தேவாலயமானது கேரளாவிலுள்ள பழமையான கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. மலபார் பகுதியில் நிகழ்ந்த கிறிஸ்துவ மதப்பிரச்சார செயல்பாடுகளில் இந்த தேவாலயத்தின் பங்கு முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் நான்கு ஃப்ரான்சிஸ்கன் கிறிஸ்துவ மதகுருமார்கள் இங்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்திறங்கியதிலிருந்து இதன் வரலாறு துவங்குகிறது. அப்போதைய ஆட்சியாளர்களிடம் அனுமதி பெற்று 1501ம் ஆண்டில் ஒரு வழிபாட்டுக்கூடத்தை அவர்கள் நிறுவியுள்ளனர். அதே இடத்தில் தற்போதுள்ள ஹோலி டிரினிட்டி கதீட்ரல் தேவாயலயமும் பின்னாளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஹோலி டிரினிட்டி கதீட்ரல் தேவாலயமானது கண்ணூர் நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பர்னாசேரி எனும் இடத்தில் உள்ளது. சாலை மார்க்கமாக இங்கு எளிதில் வந்து சேரலாம்.

பர்ணாசேரியை சுற்றியுள்ள இடம் கண்ணூர் கண்டோன்மெண்ட் என்று அழைக்கப்படுகிறது. ஹோலி டிரினிட்டி கதீட்ரல் சர்ச் மட்டுமல்லாமல் இங்கு செயிண்ட் தாமஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச் மற்றும் ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்சலோ போன்ற முக்கிய அம்சங்களும் உள்ளன.

2010ம் ஆண்டில் இந்த தேவாலயம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க கட்டிடக்கலை அம்சங்களுடன் கண்ணைக்கவரும் விதத்தில் இந்த தேவாலயம் வீற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Apr,Wed
Return On
09 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Apr,Wed
Check Out
09 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Apr,Wed
Return On
09 Apr,Thu