Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ மாவிலைக்காவு கோயில்

ஸ்ரீ மாவிலைக்காவு கோயில், கண்ணூர்

84

பிரசித்தமான ஆன்மீக திருத்தலமாகவும் பழமையான கோயிலாகவும் அறியப்படும் ஸ்ரீ மாவிலைக்காவு கோயில் எனும் இந்த ஆலயம் தன் தனித்தன்மையான சடங்குகள் கலை நிகழ்ச்சிகள் மக்களிடையே புகழ் பெற்று விளங்குகிறது.

நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கோ.கோபாலன் பிறந்த இடமான மாவிலாயி எனும் ரம்மியமான கிராமத்தில் இக்கோயில் வீற்றுள்ளது. கண்ணூர் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் கண்ணூர் – குளத்துப்புழா சாலையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

கணபதி, பகவதி அம்மன் மற்றும் தெய்வத்தார், வேட்டக்குரும்பன் போன்ற தெய்வங்களின் சிலைகள் இக்கோயிலில் பூஜிக்கப்படுகின்றன. ஸ்ரீ மாவிலைக்காவு கோயிலில் நடத்தப்படும் அடி உல்சவம் (‘அடி’ உற்சவம்)எனும் சண்டை நிகழ்ச்சியானது (சடங்கு) கேரளாவின் மற்ற எந்த கோயிலிலும் காணப்படாத ஒரு வித்தியாசமான சடங்காகும்.

இந்த நிகழ்ச்சியின்போது தத்தமது குழுவினரின் தோள்களில் அமர்ந்தபடியே இரண்டு எதிரெதிர் குழுக்களின் ஆட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் அடித்து சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி பார்வையாளர்களை அதிசயிக்க வைக்கிறது.

மலையாள பஞ்சாங்கத்தின் மேட மாதத்தின்போது அனுஷ்டிக்கப்படும் இந்த சடங்கு ஏராளமான பக்தர்களையும் பயணிகளையும் ஈர்க்கிறது. மேலும், ‘மாவிலக்காவு தெய்யம்’ எனும் மற்றொரு பிரசித்தமான ஆட்ட நிகழ்ச்சியும் (சடங்கு) பெருவண்ணன் எனும் பாரம்பரிய இனத்தாரால் இக்கோயிலில் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
02 Sep,Wed
Return On
03 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
02 Sep,Wed
Check Out
03 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
02 Sep,Wed
Return On
03 Sep,Thu