காந்தி மண்டபம் என்றழைக்கப்படும் காந்தி நினைவகம், நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக எழுப்பப்பட்டதாகும். இது 1956-ஆம் வருடம் கட்டப்பட்டது. ஒரிசா மாநிலத்தின் உள்ள கோயில்களை போன்ற கட்டிட வடிவமைப்புடன் காந்தி மண்டபம் இருப்பது ஒரு சிறப்பு.
மகாத்மா காந்தி இறக்கும் போது அவரின் வயதை குறிக்கும் விதமாக, இந்த நினைவகத்தின் உள்வடிவமைப்பு கிட்டத்தட்ட 79 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடம் October 2-ஆம் தேதி மதிய வேளையிலே, காந்தியின் அஸ்தி கரைக்கப்படுவதற்க்கு முன் வைக்கப்பட்ட இடத்தில், சூரிய கதிர்கள் நேரடியாக விழும்படி இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் மற்றொரு மிகப்பெரிய சிறப்பாகும்.
காந்தி நினைவகம் கன்னியாகுமரி கோயிலுக்கு மிக அருகாமயில் தான் உள்ளது. இந்த நினைவகத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள நூலகம். இங்கே நம் நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னால் வெளிவந்த பழைய புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் இதழ்களும் இருக்கின்றன. இந்த நூலகம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும்.



Click it and Unblock the Notifications