வாவத்துரை என்பது கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது அங்குள்ள செயின்ட் ஆரோக்கிய நாதர் கத்தோலிக் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு புகழ் பெற்றது.
கடற்கரையை ஒட்டியே உள்ள இந்த தேவாலயம், 2010-ஆம் ஆண்டு கோட்டரின் இன்றைய தலைமை குருவான அருள்திரு பீட்டர் ரெமிகஸ் D.D அவர்களால் நிறுவப்பட்டது.
இந்த தேவாலயம் செயின்ட் ஆரோக்கிய நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எப்போதும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றி அனைவருக்கும் நல்ல உடல் நலத்தை அளிப்பவரே ஆரோக்கிய நாதர். கடற்கரையோரம் நீல வண்ண வானத்து பின்னணியில் எண்ணிலடங்கா எழிலோடு காட்சியளிக்கிறது இந்த தேவாலயம்.



Click it and Unblock the Notifications