கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் ஆகிய பலரும், இங்கு அதிக அளவில் வருகின்றனர்.
இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால், இப்பிரச்சினைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கை உலவுகிறது. உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து தம் உடல் நலம் பெற பிரார்த்தித்துச் செல்கின்றனர். பூரண நம்பிக்கை கொண்டு இங்கு வருவோரின் குறைகள் யாவும் நிவர்த்திக்கப் படுவதாகவும் நம்பப்படுகிறது.
சித்திரை மாத இறுதியில் வரும் கடைசி செவ்வாய்க் கிழமையில், இங்கு நடைபெறும் பிரம்மாண்டமான திருவிழாவினாலும், இக்கோயில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. பகதர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஒரே அளவில் இவ்விழாவில் கலந்து கொள்ள வருகின்றனர்.



Click it and Unblock the Notifications