வைரவன் கோயில், செட்டியார்கள் புனிதமாகக் கருதும் ஏழு கோயில்களுள் ஒன்றாகும். சொல்லப் போனால், இது அக்கோயில்களுள் மூன்றாவது முக்கிய கோயிலாகக் கருதப்படுகிறது.
காரைக்குடி-திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள இக்கோயில், காரைக்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில், சந்தீவரர் மற்றும் அவரது துணைவியான காமாக்ஷி அம்மை ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் பின்புறம், வைரவ தீர்த்தம் உள்ளது. இப்புனித குளத்தின் தண்ணீர் அற்புத சக்திகளைக் கொண்டது என்றும், இது சருமம் மற்றும் எலும்பு தேய்மானம் ஆகியவற்றோடு தொடர்புடைய நோய்களை போக்கவல்லது என்றும் நம்பப்படுகிறது.
தோல் தடிப்பு வியாதி, முகப்பருக்கள் மற்றும் புடைப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர், இத்தீர்த்தத்தில் அடிக்கடி நீராடுவதன் மூலம் இப்பாதிப்புகள் நீங்கி நலம் பெறலாம்.
இங்கு நீராடியதன் மூலம், எலும்பு மற்றும் தசை தொடர்பான பிரச்சினைகளிலிருந்தும், நிவாரணம் பெற்றுள்ளதாக பலர் கூறுகின்றனர். மூட்டுவலி மற்றும் மூட்டுவீக்கம் போன்ற குறைபாடுகளும், இங்கு நீராடுவதன் மூலம் குணமடைகின்றன.
இன்றும், செட்டியார்கள் தங்கள் விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும், இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர்.



Click it and Unblock the Notifications