ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இந்த கேலாதேவி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது 676.40 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.
பனஸ் ஆறு இந்த சரணாலயத்தின் மேற்கு எல்லையிலும், சம்பல் ஆறு தென்கிழக்காகவும் பாய்கின்றன. கேலா தேவி அல்லது காய்லா தேவிகோயிலின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த சரணாலயம் பசுமையான மரங்கள் அடர்ந்துள்ளதால் ரம்மியமான தோற்றத்தை கொண்டுள்ளது.
பலவிதமான விலங்கினங்கள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. சிறுமான், காட்டுப்பன்றி, கரடி, கழுதைப்புலி, ஓநாய் மற்றும் சாம்பார் மான் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.



Click it and Unblock the Notifications